ஒன்றா? இரண்டா?

இளையவள் எழுந்ததும் கேட்கும் கேள்வி ‘இன்னைக்கு ஸ்கூல் இருக்கா?’. மழலையர் பள்ளியாதலால் மதியமே மனைக்கு வந்து விடுவாள்.‌ மதிய உணவுக்குப் பின் உறக்கம்; விழித்ததும் காலையில் கேட்ட அதே கேள்வி ‘இன்னைக்கு ஸ்கூல் இருக்கா?’. அவளுக்கு உறக்கத்தில் இருந்து விழித்தாலே, புதிய நாள் உதயமாகி விடுகிறது; ஒவ்வொரு நாளும் அவளுக்கு இரண்டு நாட்கள் 😊 கிட்டத்தட்ட நானும் தற்போது அதே நிலையில் தான் இருக்கின்றேன். பிப்ரவரி மாதத்தில் இருந்து பெரும்பாலும் அமெரிக்காவில் உள்ள அணியினர் உடன் இணைந்து பணியாற்றுவதால் மாலையில் வேலை கண்டிப்பாக இருக்கும். வருகையைப் பதிவு செய்ய வேண்டி இருப்பதால் காலையில் அலுவலகத்திற்கு செல்ல வேண்டி இருக்கிறது. ஆக காலையும் மாலையும் வெவ்வேறு நாட்களாய் தெரிகிறது; நேற்று யாருடனாவது பேசியிருந்தால் நேற்று முன்தினம் பேசியது போல் ஒரு தோற்ற மயக்கம். நாட்கள் மட்டுமல்லாமல் அதில் நேரமும் இரட்டிப்பானால் நன்றாக இருக்கும். அடுத்த மாதமாவது இந்த ஜெட் லேக்-கிலிருந்து விடுபடுவேனாக!

பின்னூட்டமொன்றை இடுக