காடு

காட்டுக்குள் கான்டிராக்ட் வேலைக்காக செல்லும் கதாநாயகன் கிரிதரனுடன் சேர்த்து நமக்கும் காட்டைப் பழக்குகிறார் ஆசிரியர். காட்டின் அழகில் மட்டுமல்லாமல் மலையத்தி நீலியிடமும் தன் மனதைப் பறி கொடுக்கிறான் கிரி. நீலியுடனான காதலும், சங்க இலக்கிய பிரியர் அய்யருடனான நட்பும், காட்டை ஒரு கவிதையாக்குகின்றன. மாமாவின் இறப்புக்குப் பிறகு தலைகீழாகும் கிரியின் வாழ்க்கை தான் காட்டின் மீதிக்கதை.

மிளா, கீறக்காதன், தேவாங்கு, வள்ளிக் கிழங்கு, தேன், குறிஞ்சி, காந்தள், கொன்றை, காதல், கூடல் என்று குறிஞ்சியைக் கண் முன் நிறுத்துகிறது ‘காடு’.

ஜெயமோகனின் ‘காடு’, ஓர் அனுபவம்.