ஏழாம் உலகம்

மாற்று திறன் உடையோருக்கு உணவு, உடை, உறையுள் மற்றும் வேலை வாய்ப்பு வழங்கி சேவை செய்து வருபவர் போத்திவேலு பண்டாரம் 😉 அவரது சேவையையும், சேவையின் போது அவருக்கு நேரும் இன்னல்களையும், அதனால் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களையும் வட்டார மொழியில் புட்டுபுட்டு வைக்கிறார் ஆசிரியர்.

Ezham Ulagamநாகர்கோவில் வட்டார மொழியும், கற்பனைக்கும் எட்டாத ஏழாம் உலகத்து மனிதர்களின் வாழ்க்கை நிலையும் இந்நாவல் படிக்கும் போது வேகத்தடைகள்.

ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம்’ – வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டிருக்கிறது ஓர் இருட்டு உலகம்.

‘…பிண்டம் என்னும், எலும்பொடு, சதை, நரம்பு, உதிரமும் அடங்கிய உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்…’ … பாடல் வரிகள் எங்கேயோ கேட்டுக் கொண்டிருக்கிறது.