யயாதி – இன்றைய ஒவ்வொரு சாதாரண மனிதனின் கதை, புராண நாவலாக

“இந்த கதையை கேட்டு எவனுக்காவது வாழ்வின் வழியிலுள்ள மறைவான பாதாளப் பள்ளங்கள் தெரியும்; தக்க தருணத்தில் அவனுக்கு நான் எச்சரிக்கை செய்ததாக இருக்கும்” – இவ்வாறு எண்ணிக் கொண்டே தன் வாழ்க்கைப் பாதையில் பின்னோக்கி பயணிக்கிறான் யயாதி.

அத்தினபுரத்து மகாராஜா யயாதி, தோழி அலகாவின் பிரிவால் பெருந்துயரத்திற்கு ஆளாகிறான். வாழ்வில் வெறுப்புற்ற அவன், வேட்டையின் பக்கம் தன் மனதை திசை திருப்பினான். வேட்டைக்கு சென்ற அவன், அசுர குரு சுக்ராச்சாரியாரின் புதல்வி தேவயானியால் வேட்டையாடப்பட்டான். சர்மிஷ்டையின் நேரம், ராஜகன்னிகை அவள் தேவயானியின் பணிப்பெண்ணாக அத்தினபுரம் சென்றாள். தேவயானி காதலித்தது அத்தினபுரத்து மகாராணி என்ற பட்டத்தை. யயாதி எதிர்பார்த்த அன்பு அவனுக்கு தேவயானியிடமிருந்து கிடைக்கவில்லை; அது சர்மிஷ்டையிடமிருந்து அவனுக்கு கிடைத்தது. இதை அறிந்த தேவயானி சர்மிஷ்டையை அழிக்கத் துணிந்தாள். சர்மிஷ்டை தன்னையும், தன் மகன் புருவையும் காப்பதற்காக தலைநகரிலிருந்து தொலைவிலுள்ள கிராமத்திற்கு சென்றாள். தேவயானியால் யயாதி அரச பதவியை மறந்தான்; கேளிக்கைகளில் வருடங்களை கழிக்கலானான். பதினெட்டு வருடங்கள் கழித்து… கொள்ளையர் கூட்டத்தை வேட்டையாடச் சென்ற தேவயானியின் மகன் யது கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்படுகிறான். யது சிறைப்பட்ட செய்தி அறிந்து அவனை விடுவிக்க புரு கிளம்புகிறான். மகனைத் தேடி சர்மிஷ்டை தலைநகருக்குள் வருகிறாள்.சுக்ராச்சாரியார் தன் தவத்தை முடித்துக் கொண்டு மகளைக் காண வருகிறார். யயாதியின் நண்பன்; தேவயானியின் காதலன்;கசதேவனும் தன் தவத்தை முடித்துக் கொண்டு அத்தினபுரத்திற்கு வருகை தருகிறான். மகளின் சிதைந்து போன இல்லற வாழ்வை கண்டு சினம் கொண்ட சுக்ராச்சாரியார், யயாதி தொண்டுக் கிழவனாக மாற அவனுக்கு சாபம் கொடுக்கிறார். புரு, யதுவைக் கொள்ளையர்களிடமிருந்து விடுவித்தானா? யயாதி என்ன ஆனான்?

வாழ்க்கை என்றால் என்ன? மனிதர்கள் எதைத் தேடுகிறார்கள்? இன்பம், துன்பம், சுகம், ஆனந்தம், அன்பு, சாவு ??? இப்படி பல கேள்விகளுக்கு யயாதியின் வாயிலாக விடையளிக்கிறார் வி.ஸ.காண்டேகர்.

யயாதி – இன்றையஒவ்வொரு  சாதாரண மனிதனின் கதை, புராண நாவலாக.

ந ஜாது காமா; காமாநாம்,
உபபோகேந சாம்யதி;
ஹவிஷா க்ருஷ்ணவர்த்மேவ,
பூய ஈவாபிவர்ததே.
வேட்கைகளை நுகர்வதனால்,
வேட்கை தணிவதில்லை;
நெய் சொரியத் தீப் போல,
மேலும் கிளர்ந்தெழுமே.

நீல நிறப்பிரியை

உனக்கு முன்னால் உலகம் தோற்றி விட்டது.
இல்லையேல்,
நீல நிறப்பிரியை உனக்காக,
மூன்று பங்குக்குப் பதிலாக
பூகோளம் முழுவதும்
நீலக் கோலங்களால்
நிரப்பியிருந்திருப்பான் இறைவன்.