Tour De 100 2023 – 5

வெண்கல பதக்கத்தைத் தொட இன்னும் 717 புள்ளிகள் தேவை. தொட்டு விடக் கூடிய தூரம் தான் என்றாலும் முந்தைய கட்டங்களில் தொடர்ந்த மோசமான ஃபார்ம், அதீத வேலைப் பளு, பணிச் சூழல் மாற்றங்கள், காலநிலை போன்ற காரணங்கள் அதை கடினமான இலக்கென தோன்ற வைத்து விட்டன. குறைந்தபட்ச சவாலுக்கே நான்கு நாட்கள் 30கிமீ ஓட்ட வேண்டும்; ஒரே நாளில் அதிகபட்ச புள்ளிகளைப் பெற 200கிமீ தூரத்தை ஒரே பயணத்தில் கடக்க வேண்டும். எனக்கு காலையில் கிடைக்கும் நேரத்திற்குள் எந்தெந்த சவால்களை முடிக்க முடியும் என்று கூட்டி கழித்து பார்த்தேன்.

  • முந்தைய கட்டத்தில் கடந்த தூரத்தைக் காட்டிலும் 10 சதவீதம் அதிகமாக ஓட்டினால் 200 புள்ளிகள்; அதிகபட்சம் 1000 புள்ளிகள்(50%), ஒவ்வொரு 10 சதவீத அதிக தூரத்திற்கும் 200 புள்ளிகள் வீதம். இரண்டாவது கட்டத்திலிருந்து இந்த சவால் இடம்பெறும். மிகவும் குறைந்த தூரமே முந்தைய கட்டத்தில் பதிவாகி இருந்தால் 200 புள்ளிகளைப் பெற குறைந்தபட்சம் கடக்க வேண்டிய தூரம் 99கிமீ. இந்த சவாலின் உபயத்தில் 1000 புள்ளிகள் கிடைத்தன.
  • ஒட்டு மொத்தமாக ஆயிரம் மீட்டர் ஏற்றத்தைத்(Elevation Gain) தொடும் போது 50 புள்ளிகள். எல்லா கட்டங்களிலும் இந்த சவால் உள்ளது. இதன் மூலம் 50 புள்ளிகள் லாபம்.
  • ஆயிரம் கிமீ தொலைவை இந்த நிகழ்வில் கடந்தால் 250 புள்ளிகள். சரியாக நூறாவது நாள் ஆயிரம் கிமீ-ஐக் கடந்து 250 புள்ளிகளைப் பெற்றேன்.

இவ்வாறாக Tour De 100 2023-ல் பங்கேற்று மிதிவண்டியை நூற்றுக்கு 56 நாட்கள் ஓட்டி, ஆயிரம் கிமீ கடந்து, வெற்றிகரமாக வெண்கல பதக்கத்தைத் தொட்டேன். நிறைவு.

Tour De 100 2023

நூறு நாட்கள் வாசிப்பு

நேற்று ஒரு வழியாக நூறு நாட்கள் தொடர் வாசிப்பை வெற்றிகரமாகக் கடந்தேன். கிரிக்கெட்டில் நூறு ரன்கள் விளாசி மட்டையை உயர்த்தி வெளிப்படுத்துவது போன்று மட்டற்ற மகிழ்ச்சி. இந்த நூறு நாட்களில் ஒன்பது புத்தகங்களை வாசித்திருக்கின்றேன். அதிருக்கட்டும் இதனால் என்ன பெரிதாக சாதித்திருக்கிறேன் என்றால், கடந்த இரு வருடங்களாக வருடத்திற்கு பத்து புத்தகங்களைத் தாண்டாத நான் இந்த வருடம் பதினைந்தைத் தொட்டிருக்கின்றேன்; தினமும் வாசிக்க எனை உந்தும் விசையால் தொடர் வாசிப்பு பழக்கத்தை என் வசப்படுத்தி இருக்கின்றேன். போவோம், போய் தான் பாப்போம் எவ்வளவு தூரம் போக முடியுமென்று. மகிழ்ச்சி!

100 Days in a row – Reading Streak

Tour De 100 2023 – 4

நான்காம் கட்டம், மூன்றாம் கட்டத்தை விட சிறப்பாக அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது; ஆனால் முதல் இரண்டு கட்டங்கள் உடன் ஒப்பிடுகையில் முந்தைய கட்டத்தைப் போலவே மிகவும் மந்தமான பயணமே தொடர்ந்தது. இக்கட்டத்தில் கடந்த தூரம் இரண்டே நாட்களில் 27கிமீ; இக்கட்டான காலகட்டம். இரண்டாம் கட்டத்தின் முடிவில் மிக நல்ல நிலையில் இருந்த புள்ளிகள், கொஞ்சம் கூட நகராமல், வெண்கல பதக்கத்திற்கு கண்டிப்பாக 3,4வது கட்டங்களை விட சிறப்பாக செயல்பட்டே ஆக வேண்டிய கட்டாயத்தில். தொடரும்…