தங்கல்

தங்கல்‘ – முன்னோட்டம் பார்த்ததிலிருந்தே படம் பார்க்க வேண்டும் என்றிருந்தேன். நேற்று மல்லிக்கும், ஆறுமுகமும் எதார்த்தமாக மாலை 6 மணி காட்சிக்கு 5 மணிக்கு அழைக்க, கடைசி நேரத்தில் அரக்க பறக்க முன்பதிவு செய்து, ஊர்வசி திரையரங்கில் முதல் வரிசையில்தங்கல்’ 🙂. திரையரங்கில் நுழைந்தவுடனே ஒருவர்ஹிந்தியா?’ என்று வினவ, ‘இல்லாஎன்றேன். ‘கன்னடதவராஎன்றார்; ‘தமிழ்என்றேன். ‘தங்களுக்கு தங்கலின் அர்த்தம் தெரியுமா?’ என்றார். ‘யுத்தாஎன்று பதிலளித்தேன் (தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளதங்கல்திரைப்படத்தின் பெயர்; விளம்பரங்களில் பார்த்தது :-)). ‘ஓஹோ, இது மாதிரி சில வார்த்தைகள் மட்டும் தெரியாதுஎன்றார். ‘இது மாதிரி சில வார்த்தைகள் மட்டுமே தெரியும்என்று கூறிவிட்டு நகர்ந்தேன். திரைப்படத்தைப் பற்றி ஏற்கனவே பல தளங்களில் விவரமாக எழுதி விட்டனர். முன்னோட்டத்திலேயே படத்தின் கதையை கூறிவிட்டாலும், கிட்டதட்ட மூன்று மணிநேரம் விறுவிறுப்பான திரைக்கதையாலும், தேர்ந்த நடிப்பாலும் ரசிகர்களைக் கட்டிப்போட்டதேதங்கலின்வெற்றி. மிக நன்று. (தங்கல்மல்யுத்த போட்டி

Advertisements

புத்தகங்கள்

இந்த வருடத்தைய எனது வாசிப்பனுபவத்தைப் பற்றியும், வாசித்தப் புத்தகங்களைப் பற்றியும் குட்டி குட்டிக் குறிப்புகளாக இந்த பதிவிலிடுகிறேன்.

  • வெகுநாட்களாக எனது விருப்பப் பட்டியலில் இருந்த புத்தகங்களை வாசிக்க முடிந்தது. [தண்ணீர், பின்தொடரும் நிழலின் குரல், Metamorphosis, Animal Farm]
  • இரண்டு வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த கிண்டில் தூசு தட்டப்பட்டது.  பயணங்களின் போது பைக்குள் திணித்து வைப்பதற்கு தோதாக இருந்ததும், அமேசானின் இந்திய மொழிகளில் மின்புத்தகங்கள் அறிவிப்பும் கிண்டில் பக்கம் என் கவனத்தைத் திருப்புவதற்கு போதுமானதாக இருந்தன.
  • தொடர் பயணங்களில் புத்தகங்கள் வழித்துணையாக வந்தன. இவ்வருடத்தில் எனது வாசிப்பில் ஏற்பட்டுள்ள ஏற்றத்திற்கு இது ஒரு முக்கிய காரணம்.
  • பின்தொடரும் நிழலின் குரலுக்குப் பின் சென்று கொண்டிருந்த போது, அலுவலகப் பணி நிமித்தமாக அயல்நாடு பயணம் செய்ய நேரிட்டது. சில மாதங்களுக்குப் பின், அதைத் தொடரலாம் என்ற போது மீண்டும் முதலிலிருந்தே வாசிக்க நேரிட்டது. மீள்வாசிப்பில் குரல் முன்பை விடத் தெளிவாகவே கேட்டது. இவ்வருடம் நான் வாசித்ததில் மனதைக் கவர்ந்த புத்தகம்.
  • குட்ரீட்ஸ் புத்தகங்கள் வாசிப்பவர்களுக்கான சமூக வலைத்தளம். இதில் கணக்கு துவங்கி வருடங்களானாலும், பயன்படுத்த ஆரம்பித்தது என்னவோ இவ்வருடம் ஜீன் மாதத்திலிருந்து தான். அதில் 2016 வாசிக்கும் சவாலில் ’10 புத்தங்கள் வாசிக்க வேண்டும்’ என்று நானும் இணைந்தேன். ஒரு வழியாக நேற்று தான் பத்தாவது புத்தகத்தை வாசித்து முடித்து, அந்த சவாலை நிறைவு செய்தேன். மகிழ்ச்சி!
  • வாசித்த புத்தகங்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டை விட அதிகம். வரும் ஆண்டில் இவ்வருடத்தை விட அதிகமாக வாசிக்க வேண்டும் ;-).

screen-shot-2016-12-25-at-7-44-33-am

திரைப்படங்கள்

இந்த வருடம் நான் வெள்ளித்திரையில் கண்டுகளித்த திரைப்படங்கள் வெறும் 5 :-); வீட்டுத்திரையையும் சேர்த்து 30-40 தேறும்.  ஏன் வெறும் 5 என்று சொல்கிறேனென்றால், நாங்கலாம் வாரவாரம் ஒரு திரைப்படத்தை வெள்ளித்திரையில் காண்பவர்கள்; வீட்டில் ஒரே நாளில் 5 படங்களெல்லாம் பார்த்திருக்கிறேன். திரைப்படங்கள் பார்ப்பதைக் குறைத்துக் கொள்ள வேண்டுமென்பது எனது புத்தாண்டு உறுதிமொழிகளில் வழக்கமான ஒன்றாகும். எந்தவொரு உறுதியும் இந்த ஆண்டு எடுக்காமலே இதெப்படி சாத்தியமானது; தொடர் பயணங்களும், வாசிப்பும், வேலைப்பளுவும் காரணமாக இருக்கலாம். பார்த்தவற்றிலும் எதுவும் ஈர்க்கவில்லை. அக்டோபர் மாதம் முதல் திரைப்படங்களுக்காகவே பிரத்யேகமான சமூக வலைதளமான Letterboxd -ஐ பயன்படுத்தி வருகிறேன். அதிலுள்ள டைரிக் குறிப்புகளின் படி, கடந்த மூன்று மாதங்களில் (இன்று வரை) 6 படங்கள் பார்த்திருக்கின்றேன் :-).2016_watched_movies

தொடரி

இந்த வருடம் பாதிக்கும் மேற்பட்ட வார இறுதி நாட்கள் வருவதும் போவதுமாக பயணத்திலேயே இருந்தன; பெரும்பாலானவை இரயில் பயணங்களே. பல மாதங்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்த பயணச்சீட்டு, பயணத்திற்கு முந்தைய நாள் முன்பதிவு செய்த பயணச்சீட்டு(தக்கல், பிரீமியம் தக்கல்), அவசர அவசரமாக இரயில் புறப்படுவதற்கு சற்று முன் எடுக்கப்பட்ட பயணச்சீட்டு, பகல் நேரப் பயணம் என ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு வகையில் மறக்க முடியாதவை. அதிலும் ஒருமாத காலம் தினமும் கால்ட்ரெயினில் சன்னிவேல் – சான்ஃப்ரான்சிஸ்கோ சென்ற அலுப்பான நாட்கள்; இதுவரை பள்ளி, கல்லூரி, அலுவலகம் என எதற்கும் இவ்வளவு தூரம்/நேரம் பயணித்ததில்லை. நிறைய பயணங்கள் மேற்கொண்ட வருடமாயிருந்தாலும் திட்டங்கள் ஏதுமில்லாமல் ஒட்டிக் கொண்டு லிட்டில் பேசின் மாகாணப் பூங்கா சென்றதைத் தவிர சுற்றுலா பயணம் என்ற ஒன்று வழக்கொழிந்து போய்விட்டது. கூடாரம் அடித்துத் தங்கியதாலும், இரண்டு நாட்களுக்கும் மேலாக கைபேசி என் கைகளில் இல்லாததினாலும்.அமைதி-ரம்மியமான சூழலினாலும் லிட்டில்பேசினில் முகாமிட்டது முக்கியமானதாகிறது. மொத்தத்தில் 2016 எனக்கு தொடர்ச்சியான தொடரிப் பயணங்களால் நிறைந்த ஆண்டு :-).img_20160831_090246-collage

ஓட்டமும் நடையுமாக

ஓட்டமும் நடையுமாக 2016 இறுதியை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. கடந்த இரண்டு மாதங்களை விட, இந்த மாதம் அதிக தூரம்(5கி.மீ) ஓடியிருக்கின்றேன் 😉 (போன இரண்டு மாதங்களையும் சேர்த்தே 2 கி.மீ தான் தேறியிருக்கிறது). அது சரி இந்த ஆண்டு, நான் எவ்வவளவு தொலைவைக் கடந்திருக்கின்றேன். அப்படியே ரன்கீப்பர் பக்கம் போய் பார்த்தால், 356 கி.மீ என்று காட்டுகிறது. எனது ரன்னிங் (ஓட்ட என்று எழுதினால் வேறு மாதிரி வாசிப்பீர்கள்)வரலாற்றில், இந்த ஆண்டு தான் அதிக தூரம் ஓடியிருக்கின்றேன் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. மாதவாரியாக நோக்கும் போது,

  • ஜனவரி மாதம் அசைவற்று இருந்திருக்கின்றேன்.
  • பிப்ரவரி மாதம் நடக்க ஆரம்பித்தேன்.
  • மார்ச் மாதம் சிறு முன்னேற்றம். (45 கி.மீ)
  • ஏப்ரல் மாதம் ஏறுமுகம் (61கி.மீ). இதில் RFH 10K RUN 2016 போட்டியில் பங்கேற்றதும் அடக்கம்.
  • மே மாதம் சற்று சறுக்கினாலும், அதிகம் இறங்கிவிடவில்லை (52கி.மீ). இந்த மாதம் TCS World 10K போட்டியில் பங்கேற்றேன்.
  • ரன்கீப்பரில் ஜீன் மாதத்திற்கு 75கி.மீ என இலக்கு நிர்ணயித்து, அதை அடைய  வெறி கொண்ட வேங்கையென, தலை தெறிக்க ஓடிய மாதம் :-). மிகச்சிறப்பான மாதம் (85கி.மீ).
  • சிங்கம் தேய்ந்து சிற்றெறும்பான கதையாய் ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் ஓட்டம் படிப்படியாகக் குறைந்தது :-(.  ஜூலை மாதம் பெங்களூரு 10 கி.மீ பந்தயத்தில் பங்கேற்றது சற்று ஆறுதல்.
  • அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஜனவரி மாதத்தில் செய்ததையே கடைபிடித்தேன் ;-).
  • டிசம்பரில் கடந்து வந்த பாதையைத் திரும்பி பார்த்து, மீண்டும் பயணத்தைத் தொடங்கியிருக்கிறேன்.

இன்னும் ~40கி.மீ ஓடினால் இந்த வருடத்தைய கணக்கில் 400கி.மீ வரவு வைக்கப்படும்.இன்னும் 20 நாட்கள் இருக்கின்றன; பொறுத்திருந்து பார்ப்போம்.