ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும்

மது வியாபாரி சபாபதி, விலைமாது லீலாவுக்கு ஆதரவுக் கரம் நீட்டுகிறான். அதனால் அவன் குடும்ப வாழ்வில் விரிசல் ஏற்படுகிறது. போலீஸ் வேட்டையின் போது அவனது கால் ஊனமாகி விட, தொடர்ந்து அவன் செல்லும் புதிய பாதையுடன் நிறைவடைகிறது – ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும்.

மார்க்ஸ் எனும் மனிதர்

ஒரு மகத்தான சிந்தனையாளரின் வாழ்க்கை வரலாறைப் படித்த திருப்தியைத் தந்தது ‘மார்க்ஸ் எனும் மனிதர்’. மனிதர் அப்படி என்ன தான் சொல்லிருக்கார்? இல்ல செஞ்சிருக்கார்?
‘தத்துவவாதிகள் இதுவரை உலகை வியாக்யானம் செய்து வந்துள்ளனர். ஆனால் செய்ய வேண்டிய பணியோ அதை மாற்றியமைப்பது’ என்று சொல்லி, அதற்கு வித்திட்டு மறைந்தவர் மார்க்ஸ்.
மார்க்ஸ் எனும் மனிதர்‘மார்க்ஸ் எனும் மனிதரின்’ நூலாசிரியர் என்.ராமகிருஷ்ணன், மார்க்ஸின் பிறப்பு, அவருக்கு தத்துவவியலில் இருந்த ஆர்வம், பத்திரிக்கையாளராக மார்க்ஸ், அவரது திருமணம், மார்கஸுக்கும், ஃபிரெடரிக் எங்கெல்ஸுக்கும் இருந்த ஆழமான நட்பு, கம்யூனிஸ்ட் லீக்கின் தோற்றம், மூலதனம் நூல் வெளியீடு மற்றும் அவரது இறுதி கால வாழ்க்கை என்று மார்க்ஸின் வாழ்வில் நடந்த ஒவ்வொரு நிகழ்வையும் எளிய நடையில் விவரித்திருக்கின்றார்.
ரஷ்யப் புரட்சியாளர் லெனின் மார்க்ஸியத்தின் சிறப்பை,
‘மார்க்ஸியம் வல்லமை வாய்ந்தது.
ஏனென்றால் அது உண்மையானது.’
என்று சுருக்கமாக கூறுவதுடன் இப்புத்தகம் நிறைவடைகின்றது.

மார்க்ஸ் எனும் மனிதர்வழிகாட்டி.