சாவுல வாழ்வு!

தலைப்பைப் பார்த்து விட்டு, இந்தப் பதிவு பாடை கட்டுறவங்களப் பத்தியோ, சாவுக்கு வாசிக்கிறவங்க பத்தியோ இல்ல வெட்டியான்களப் பத்தியோ இருக்கலாம்னு நீங்க நினைக்கலாம்; அதாங்க இல்ல. தோழர் ஒருவர் சில நாட்களுக்கு முன் ஒகேனக்கல் அருவிக்குப் போயிட்டு வந்திருக்கார். அங்கே நம் தோழர் அந்த ஊர்க்காரரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது கேட்டிருக்கிறார்.

தோழர் : அருவி அருமையாக இருக்கிறது. ஆனால் தப்பி தவறி விழுந்து விட்டால் அவ்வளவு தான். அது மாதிரி விழுந்த எத்தனையோ பேர நீங்க காப்பாத்தி இருப்பீங்கள?
ஊர்க்காரர் : இல்லை.
தோழர் : உங்களுக்குத் தான் நல்லா நீச்சல் தெரியுமே. உதவினு யாராவது உரக்க கத்தும் போது அவங்களக் காப்பாத்த மாட்டீங்களா?
ஊர்க்காரர் : மாட்டோம். ஏன்னா அப்படிக் காப்பாத்துனா ‘தேங்ஸ்’னு சொல்லிட்டு நூறோ, இருநூறோ கைல கொடுத்துட்டு அவங்க வழியப் பாத்துட்டுப் போயிருவாங்க. ஆனா அவங்கள அப்படியே விட்டுட்டோம்னா, பொணத்த வெளிய கொண்டு வாரது, அப்புறம் மத்த காரியத்துக்குன்னு பத்தாயிரத்துக்கு மேல கிடைக்கும்.

இது எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாத் தான் இருந்தது. என்னென்னமோ தோணுது…

சாவுல வாழ்வு!