காற்றாடியின் இறக்கைகள்

சுற்றும் போது
ஒற்றை வட்டமாகின்றன,
காற்றாடியின் இறக்கைகள்.

சக்வாரோ

அனல் வளி வீசும், இள வேனிற் காலத்தில்,
கானல் நீராற்றின் இரு புறமும், தீட்டிக் கொண்டிருந்தன
சுடு மணலில் தம் நிழலோவியங்களை
நெடு சக்வாரோ அழல் மரங்கள்.

தொடர் உரையாடல்

உனைப் பிரிந்திருந்த நாட்களில்,
உன் குரல் மருந்தானது.
ஜி-பேச்சு மூச்சானது.
இடம், பொருள், காலம் … ஏனும் அறியேன்,
உன்னோடு அளவளாவும் போது.
நேரவலயம் வெவ்வேறென்றாலும்,
நித்திரையை விலக்கி வைத்து விட்டேன்.
இரவு-பகலாக, தொடரும் உரையாடல்,
உன்னைக் காணும் நாள் வரும் வரை.

இவங்க மட்டுமா தூங்காம இருக்காங்க. நம்மளயும்ல தூங்க விட மாட்றாங்க 😦