கடவுள்


சுஜாதாவின் ‘கடவுள்’, கடவுள் நம்பிக்கை பற்றி அவர் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு பத்திரிக்கைகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. ‘பிரபஞ்சத்தைப் படைத்தது யார்? (யாராவது படைத்திருந்தால் அவரைப் படைத்தது யார்?)’ என்று பலருக்குள்ளும் இருக்கும் கேள்விகளுடன் கட்டுரையைத் தொடங்குகிறார். சரி கேள்விகளுக்கான விடையைச் சொன்னாரா?

இப்படி பல சமாச்சாரங்களை தெரிஞ்சு வெச்சிருந்த மனிதர், நமக்கும் சொல்கிறார். ஆனால் கடைசி வரைக்கும் மேலே சொன்ன கேள்விகளுக்கு விடையே சொல்லவில்லை 😦 சரி கடவுள் நம்பிக்கை அவருக்கு இருக்கா?

அறிவியலின் பதில் – ‘இருக்கலாம்’. ஆன்மீகத்தின் பதில் ‘இருக்கிறார்’. என் பதில் ‘it depends’

புத்தகத்தில் பல இடங்களில் நம்மாழ்வார் பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று:-

ஆணல்லன் பெண் அல்லன்; அல்லா(து) அலியுமல்லன்
காணலும் ஆகான். உளன் அல்லன்; இல்லையல்லன்
பேணுங்கால் பேணும் உருவும் ஆகும். அல்லனுமாம்.
கோணை பெரிதுடைத்து எம்பெம்மானைக் கூறுதலே!

சுஜாதாவின் ‘கடவுள்’ – இருக்காரு… ஆனா இல்ல… (படிக்கலாம்)

அடையாளம்

நினைவுகள் தான்
உயிரின் அடையாளங்கள்.
உயிரே!
நினைவெல்லாம்
நிறைந்திருக்கும்
நீ,
என் அடையாளம்.

வாழ்த்துக்கள்

பிறந்தநாள்,
தீபாவளி,
பொங்கல் – என்று
விழாக்கால வாழ்த்து அட்டைகள்
வீட்டிற்கு வந்து வருடங்களாகி விட்டன.
அலைபேசி அழைப்புகள்,
குறுந்தகவல்கள்,
மின்னஞ்சல்கள் கூட பழையனவாகிப் போயின,
சமூக வலைப்பின்னல்களாலான,
மெய்நிகர் உலகினால்.
அவரவர் கணக்கில் நுழையும் போது,
ஆங்காங்கே தென்படுகின்றன இப்போது,
முகப்புத்தகச் சுவர்களில் எழுதப்பட்டிருக்கும்,
வெறும் வார்த்தைகளாகிப் போன,
வாசமில்லா வாழ்த்துக்கள்.