முப்பது நாட்களில் …

பதுங்கி பின்
பாய வேண்டும்.
தாக்கும் முன்பு இரைக்கு
நெருக்கமாக இருக்க வேண்டும்.
பெரிய இரை வேட்டையின் போது,
தொண்டையை முதலில் கடிக்க வேண்டும்…

முப்பது நாட்களில் மான் வேட்டை‘யைப்
புரட்டிக் கொண்டே,
இராக்கனாவில் மூழ்கியிருந்தது,
எதிரே விளையாடிக் கொண்டிருந்த
எலிகளைக் கூட கண்டு கொள்ளாமல்,
அந்த பூனைக்குட்டி.