நாஞ்சில் நாடன் – பி.ஏ.கிருஷ்ணன்

நேற்று ஃப்ரீமாண்ட் நகர நூலகத்தில் நடைபெற்ற, பாரதி தமிழ்ச் சங்கம் எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடனையும், பி.ஏ.கிருஷ்ணனையும் கௌரவிக்கும் நிகழ்ச்சியில் நானும், முசியும் கலந்து கொண்டோம். எழுத்தாளர்களைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகத்துடன் நிகழ்ச்சி ஆரம்பித்தது. அதனையடுத்து வாசகர்கள் சிலர் நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள் பற்றியும், அவரது எழுத்துக்களில் இலக்கியம் மற்றும் அறம் பற்றியும் பேசினார்கள். வாசகர்கள் சிலர் பி.ஏ.கிருஷ்ணனின் புலிநகக் கொன்றை மற்றும் கலங்கிய நதி நாவல்களைப் பற்றி பேசினார்கள். அடுத்ததாக எழுத்தாளர்கள் பி.ஏ.கிருஷ்ணனும், நாஞ்சில் நாடனும் ஏற்புரை வழங்கினார்கள். அருமையானதொரு சந்திப்பு. இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த பாரதி தமிழ்ச் சங்கத்திற்கு நன்றி.