சாயங்காலம் – வான்மேகம் – நீள்வானம்

சாயங்காலம்
அழுது அழுது
சிவந்த கண்களுடன்
ஆதவன், விண்ணிடமிருந்து
பிரியாவிடை பெறும் நேரம்.

வான்மேகம்
நிறம் மாறும் பச்சோந்தி போல்,
நிமிடத்திற்கு ஓர் உருமாறினாலும்,
வெள்ளை மனம் கொண்ட அமீபா.

நீள்வானம்
வெண்மேகப் போர்வையை விலக்கி,
வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும்
நீல விழிகள் கொண்ட பூதம்.

****
இரா.சுப்ரமணி
15 02 2013