இரயிலும் நிலவும்

இரவில் ஆரம்பித்தது பயணம்.
இரயிலும், நிலவும் சேர்ந்தே நகர்ந்து கொண்டிருந்தன.
இரயிலை விரட்டிக் கொண்டு
நிலவு நகர்கிறதா?
நிலவைத் துரத்திக் கொண்டு
இரயில் ஓடுகிறதா?
இரயிலா? நிலவா?

பொழுது விடிந்தது.
மூச்சிறைக்க, இரயில் மட்டும்
தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தது.
நிலவைக் காணவில்லை!

பல்பு

நேற்று மதுரையிலிருந்து மைசூர் எக்ஸ்பிரஸில் பெங்களூருக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். நெரிசல் அதிகமாக இருந்ததால், நேராக அப்பர் பெர்த்தில் ஏறி அமர்ந்து கொண்டேன். ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். 10:30 வரை வாசிக்கலாம் என்று திட்டம். 9 மணிக்கெல்லாம் ஒவ்வொருவராக உறங்குவதற்கு தயாராகினார்கள். எதிரே அப்பர் பெர்த்தில் இரண்டு சிறுவர்கள்; லோயர் பெர்த்தில் அவர்களது அம்மாவும், இன்னொரு சிறுமியும். பெர்த்துகளுக்கான இடைவெளியில் வேட்டியை விரித்து, அதில் படுத்துக் கொண்டார் அவர்களது அப்பா. அந்த அம்மா சொன்ன ‘அட்ஜஸ்ட்மென்ட்டின்’ அர்த்தம் (2/5) இப்போது புரிந்தது. எல்லோரும் படுத்து விட்டார்கள். ஒரே ஒரு மின்விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. ஒரு வழியாக நான் 9:45-க்கு எனது வாசிப்புத் திட்டத்தை தளர்த்திக் கொண்டு, மிடில் பெர்த்தில் இருந்தவரிடம் ‘அண்ணே, லைட்ட நீங்க ஆஃப் பண்ணிக்கலாம்’ என்றேன். ‘ட்ரை பண்ணி பார்த்துட்டோம். அது ஆஃப் ஆக மாட்டீங்குது’ என்று சொல்லி விட்டு கண்களை மூடிக் கொண்டார் அவர். நான் வாங்கிய பல்பைப் பார்த்து, வெண்பற்களைக் காட்டி இளித்துக் கொண்டிருந்தது அந்த மின்விளக்கு.