பிலோமி டீச்சர்

வா.மு.கோமுவின் ‘பிலோமி டீச்சர்’ சிறுகதைத் தொகுப்பை வாசித்தேன். தொகுப்பில் நினைவில் நின்ற சிறுகதைகள்:-

Philomi_Teacher

 • துணையின் தேவையை உணர்த்தும் ‘திசை தவறி நகரும் நதிகள்
 • திருநங்கைகளின் பிரச்சனைகளை முன் வைக்கும் ‘புள்ளி பிசகிய கோலம்‘, ‘உயிர் வலிக்கிறதே யாத்தே!’
 • மனநோயாளிகளின் மனநிலையைப் பிரதிபலிக்கும் ‘எது நிஜம்? எது பொய்?’
 • சிலரிடம் நாம் காட்டும் அதீத அன்பிற்கு பின்னால் நம் நினைவுகளில் வாழும் நெருக்கமானவர்கள் இருப்பதைக் காட்டும் ‘கட்டம் போட்ட லுங்கி அணிந்தவன்’
 • மண உறவில் ஏற்பட்ட காயங்கள் மறைந்து கொண்டிருக்கையில், தன்னை இன்னொருவனிடம் முழுவதும் ஒப்படைத்து விட்டவளுக்கு ஏற்படும் காயம் சொல்லும் ‘பிலோமி டீச்சர்
Advertisements

சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி?

978-81-8493-788-6_bதிட்டமிட்டு செல்லும் பயணங்களை விட எதிர்பாராமல் செல்லும் பயணங்கள் தரும் அனுபவங்கள் மறக்க முடியாதவைகளாக இருக்கும். பயணங்களில் நாம் பார்த்தவை, கேட்டவை, சந்தித்த மனிதர்கள் நமக்குள் ஏதாவது ஒரு வகையில் தாக்கங்களை ஏற்படுத்துவர் என்பது மறுக்க முடியாதது. மருதனின் ‘சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி?‘ புத்தகம், சே குவேராவின் மோட்டார் சைக்கிள் டைரி குறிப்புகளையும், ஆல்பர்ட்டோ, ஃபிடல் காஸ்ட்ரோ, காலிகா, ஜான் லீ ஆன்டர்சன் ஆகியோரது சே குறித்த எழுத்துகளையும் எடுத்து கொண்டு அவர் எதனால் புரட்சியாளராகி இருக்கலாம் என்று அலசுகிறது. அடுத்த வேளை எங்கே? எப்படிபோகப் போகிறோம்? என்று அவர்களுக்கே தெரியாமல் முழுக்க முழுக்க மனிதத்தை நம்பி, மக்களோடு மக்களாக எர்னஸ்டோவும், ஆல்பர்ட்டோவும் மோட்டார் சைக்கிளில் ஒன்பது மாத காலம் (18,865 கி.மீ) மேற்கொண்ட தென் அமெரிக்கப் பயணம், சே உருவாக உண்மையாகவே ஓர் ஊக்கியாக இருந்திருக்குமோ? மோட்டார் சைக்கிள் பயண வரைபடத்தைக் கீழே காணலாம்.che_guevara_motorcycle_diaries_map

ஆட்சி மாற்றம்

“சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி?” வாசித்துக் கொண்டிருக்கின்றேன். புத்தகத்தில் சிலியின் ஆட்சி மாற்றத்தைப் பற்றி ஒரு பத்தி வருகிறது. நமது சூழலுடன் பொருந்திப் போகும் அந்தப் பத்தி:-

சிலியில் மட்டுமல்ல பிற லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் ஆட்சி மாற்றத்தில் மக்களுக்கு அதிக வாய்ப்புகள் இல்லை என்பது தான் உண்மை. இவர் இல்லாவிட்டால் இன்னொருவர்.பெயர்தான் மாறுமே ஒழிய அரசு அமைப்பு மாறாது. ஒடுக்குமுறை மாறாது. இருந்தாலும் தேர்தல் என்றொரு சடங்கு நடத்தப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. மக்களும் வேறு மாற்று இல்லாததால் இந்த ஏமாற்று நடைமுறையைத்தான் தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்கள். இவர் சரியில்லை என்று பட்டால் அவரைக் கொண்டு வருகிறார்கள். அவர் சரியில்லாது போனால் மீண்டும் இவர். அல்லது, இன்னொருவர்.

புத்தகங்கள்

இந்த வருடத்தைய எனது வாசிப்பனுபவத்தைப் பற்றியும், வாசித்தப் புத்தகங்களைப் பற்றியும் குட்டி குட்டிக் குறிப்புகளாக இந்த பதிவிலிடுகிறேன்.

 • வெகுநாட்களாக எனது விருப்பப் பட்டியலில் இருந்த புத்தகங்களை வாசிக்க முடிந்தது. [தண்ணீர், பின்தொடரும் நிழலின் குரல், Metamorphosis, Animal Farm]
 • இரண்டு வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த கிண்டில் தூசு தட்டப்பட்டது.  பயணங்களின் போது பைக்குள் திணித்து வைப்பதற்கு தோதாக இருந்ததும், அமேசானின் இந்திய மொழிகளில் மின்புத்தகங்கள் அறிவிப்பும் கிண்டில் பக்கம் என் கவனத்தைத் திருப்புவதற்கு போதுமானதாக இருந்தன.
 • தொடர் பயணங்களில் புத்தகங்கள் வழித்துணையாக வந்தன. இவ்வருடத்தில் எனது வாசிப்பில் ஏற்பட்டுள்ள ஏற்றத்திற்கு இது ஒரு முக்கிய காரணம்.
 • பின்தொடரும் நிழலின் குரலுக்குப் பின் சென்று கொண்டிருந்த போது, அலுவலகப் பணி நிமித்தமாக அயல்நாடு பயணம் செய்ய நேரிட்டது. சில மாதங்களுக்குப் பின், அதைத் தொடரலாம் என்ற போது மீண்டும் முதலிலிருந்தே வாசிக்க நேரிட்டது. மீள்வாசிப்பில் குரல் முன்பை விடத் தெளிவாகவே கேட்டது. இவ்வருடம் நான் வாசித்ததில் மனதைக் கவர்ந்த புத்தகம்.
 • குட்ரீட்ஸ் புத்தகங்கள் வாசிப்பவர்களுக்கான சமூக வலைத்தளம். இதில் கணக்கு துவங்கி வருடங்களானாலும், பயன்படுத்த ஆரம்பித்தது என்னவோ இவ்வருடம் ஜீன் மாதத்திலிருந்து தான். அதில் 2016 வாசிக்கும் சவாலில் ’10 புத்தங்கள் வாசிக்க வேண்டும்’ என்று நானும் இணைந்தேன். ஒரு வழியாக நேற்று தான் பத்தாவது புத்தகத்தை வாசித்து முடித்து, அந்த சவாலை நிறைவு செய்தேன். மகிழ்ச்சி!
 • வாசித்த புத்தகங்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டை விட அதிகம். வரும் ஆண்டில் இவ்வருடத்தை விட அதிகமாக வாசிக்க வேண்டும் ;-).

screen-shot-2016-12-25-at-7-44-33-am

இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு

இந்தியப்-பிரிவினை

இந்தியப் பிரிவினை

பொதுவாக முடிவு தான் கல்லறையில் இருக்கும். ஆனால் இந்தப் புத்தகத்தின் முதல் அத்தியாயமே கல்லறையில் ஆரம்பிக்கிறது. ஸ்டேஷன் வந்து நிற்கும் இரயிலில் பிணக் குவியல்களின் ஊடே தங்கள் உறவுகளைத் தேடும் மக்களைச் சித்தரிக்கும் காட்சி, பிரிவினையின் எதிர்வினைக்குச் சான்று. அதிகாரத்தை இந்தியாவுக்கு மாற்ற புதிய வைஸ்ராயாக மவுண்ட் பேட்டன் நியமிக்கப்படுவது, இந்திய தேசிய காங்கிரஸ் – முஸ்லீம் லீக்கின் தோற்றம், நேரு-படேல்-காந்தி-ஜின்னாவுடன் மவுண்ட் பேட்டன் பிரிவினை பற்றி நடத்திய பேச்சு வார்த்தைகள் (இந்த அத்தியாத்தை வாசித்து முடித்திருந்த வேளையில், ஆகஸ்டு 15 அன்று மாலை ‘காந்தி’ திரைப்படத்திலிருந்து சரியாக இதே காட்சி ஒரு சேனலில் ஓடிக் கொண்டிருந்தது), ஜூன் 3, 1947 வெளியான சுதந்திரம் பற்றிய அறிவிப்பு, பாகப் பிரிவினை, இந்தியா-பாகிஸ்தானைப் பிரிக்க ராட்கிளிஃப் வரைந்த கோடு, சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்தல் (ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்தியாவுடன் சேர்க்கும் போது நடந்த கலவரங்களை மையமாக்கிப் புனையப்பட்டது, அசோகமித்திரனின் ’18வது அட்சக் கோடு’), சுதந்திர தினம், காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்க ஜின்னா தீட்டிய திட்டம் என பிரிவினையை ஒட்டி நடந்த நிகழ்வுகளை எல்லாம் சுருக்கமாக வெட்டி ஒன்றாக ஒட்டியிருக்கிறார். இதை வாசிக்கும் போது உங்களுக்கு ஏதேனும் ‘ஏன்? எப்படி?’ என்று கேள்விகள் தோன்றியிருந்தால் அது கண்டிப்பாக ‘கேள்விகள்’ என்ற அத்தியாயத்தில் இருக்கும். பிரிவினையில் ஹிந்துத்துவா அமைப்புகளின் பங்கும் விளக்கப்பட்டிருக்கிறது. ‘விலை’ சிறிய அத்தியாயமாக இருந்தாலும் பிரிவினைக்காகக் கொடுத்த பெரிய விலைகளை சாதாரணமாய்ச் சொல்லி செல்கிறது.

இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடுராட்கிளிஃப் வரைந்த கோட்டைச் சுற்றி ஓர் உறைய வைக்கும் கோட்டோவியம்.

புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்.

புத்தகத்தை வாசித்த கையோடு பிரிவினையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தீபா மேத்தாவின் ‘1947: Earth‘ என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். முதல் அத்தியாயத்தில் வரும் அந்த இரயில் காட்சி திரைப்படத்திலும் வருகிறது; ஆனால் இங்கே இரயில் குருதாஸ்பூரிலிருந்து லாகூருக்கு வருகிறது முஸ்லீம்களின் பிணங்களோடு. பிரிவினையின் விலை, வலியைக் காண இந்தத் திரைப்படத்தையும் ஒருமுறை பாருங்கள். இந்தத் திரைப்படம் 2000-ல் ‘சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படத்துக்காக’ இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டுள்ளது.