இரண்டு வாரங்களுக்கு முன்பு மிதிவண்டி பயிற்சியின் போது சற்றும் எதிர்பாராத விதமாக ஒரு நாய் குறுக்கே வந்தது; வண்டியைக் கட்டுப்படுத்த நேரமின்றி நாயின் மீது மோதி மிதிவண்டி ஒருபுறமும் நான் மறுபுறமும் சாலை நடுவே விழுந்தோம். நாடியில் நல்ல அடி; கை, கால்களிலும் விழுப்புண்கள். ஓரளவுக்குத் தேறி விட்டாலும், இன்று வரை மிதிவண்டியை இன்னும் தொடவில்லை. இரண்டு மாதங்களாகத் தொடர்ந்து வந்த ஒரு பழக்கம் சிறு வேகத்தடையால் முடங்கிப் போய் கிடக்கின்றது. பழக்கங்களை இந்த இடைவளிகள் சோம்பலால் நிரப்பி பாழாக்கி விடுகின்றன. ஒரே இடத்தில் கல் போல் நில்லாது, விரைவில் தடைகளைத் தாண்டி ஆறாய் ஓடட்டும் எந்தன் மிதிவண்டி.