‘இயற்கை’ எனக்குப் பிடித்தத் திரைப்படங்களில் ஒன்று. டூரிங் டாக்கீஸ் யூட்யூப் சேனலில் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சியில் ‘இயற்கை’ திரைப்படம் உருவான விதத்தை இன்று ஜனநாதன் எடுத்துரைத்தது நன்றாக இருந்தது. அதிலும் ‘வெண்ணிற இரவுகளை’ப் பற்றி சொன்ன விதம் அருமை ‘இல்ல சார் அப்படி ஒரு ஆள் கதை எழுதிருக்கான். வெண்ணிற இரவுகள்னு ஒரு கதை. தஸ்தயேவஸ்கினு ஒருத்தன். சும்மா உடம்பு சரியில்ல குழந்தைக்கி; 150ரூ-க்கி ஒரு கதை எழுதிருக்காரு. உலகமே வியக்கும் கதை சார். ரெண்டு பேருமே சிறந்தவன்; அதில யாரத் தேர்ந்தெடுப்பா? அப்டின்றது அந்தக் கதையின் சாராம்சம்‘. பார்த்த போது ‘வெண்ணிற இரவுகள்’ நாவலை நான் புத்தகக் கண்காட்சியில் தேடி அலைந்தது தான் ஞாபகத்துக்கு வந்தது. புத்தகத்தின் பேரைக் கேட்டதும் அப்படியே மேலும் கீழும் பார்ப்பர். அடுத்ததாக யார் எழுதியது என்று கேட்பர். நான் கஷ்டப்பட்டு தஸ்தயேவ்ஸ்கினு சொல்வேன். அவர்கள் இல்லையென்று கையை விரிப்பர். பின்னர் ஒரு கடையில் தஸ்தயேவ்ஸ்கியின் குறுநாவல்கள் புத்தகத்தில் வெண்ணிற இரவுகளைப் பார்த்து வாங்கி வந்து சேர்ந்தேன். தஞ்சை பின்னணியில் அவர் சொல்லப் போகும் கதை எப்படி இருக்கும்னு யோசித்துக் கொண்டிருக்கிறேன்; பார்ப்போம்.