கண்களைக் கட்டிப் போட்டு, குனிந்த தலை நிமிராமல் நம்மை வளைத்துப் போட்டிருக்கும் கைபேசிகள் நம் உறுப்புகளுள் ஒன்றாகி வெகு நாட்களாகி விட்டன. ஏதோ சிந்தனையில் இன்று ஆழ்ந்திருந்த போது, என்னென்ன கைபேசிகள் வைத்திருந்தேன், அவற்றை எப்போது வாங்கினேன் என்று எண்ணிப் பார்த்தேன். 2006-ம் ஆண்டிலிருந்து கைபேசியை உபயோகித்து வரும் நான், இதுவரை உபயோகித்த கைபேசிகளில் ஒரே நிறுவனத்தின் கைபேசியை ஒருமுறைக்கு மேல் வாங்கியதில்லை என்பது வியப்பு! நான் பயன்படுத்திய/பயன்படுத்தும் கைபேசிகள்:-