2012

2012-ல எவ்வளவோ நடந்திருந்தாலும், அதுல சில நிகழ்வுகளை மட்டும் இந்தப் பதிவில் பார்ப்போம்.

  • கோவா சென்றிருந்த போது, ‘சரி, ஆடிப் பார்க்கலாம்’ என்று நீர் விளையாட்டுகளில் இறங்கினேன். முதல் விளையாட்டு, பனானா. அந்த பனானா கடலுக்குள் செல்லும் முன்னரே, ஒரு பெரிய மாசா வந்து அடித்து பனானாவை பனால் பண்ணி விட்டுச் சென்று விட்டது. அதுக்கப்புறம் உள்ள விளையாட்டுகளை விளையாடுவதற்குள், நான் பட்ட பாடு இருக்கிறதே…
  • மதுரையில் வாடகை வீட்டிலிருந்து, சொந்த வீட்டிற்கு[சாந்தி நிலையம்] குடி புகுந்தோம்.
  • பிரபு அண்ணா கூட்டிச் சென்ற, மேகங்கள் உருகி அருவியாய் விழுவது போல் இருந்த யோசிமிட்டி நீர்வீழ்ச்சி. ‘செக்வாயா காடுகளே… வண்டு முனகும் பாடல்களே… தூரச் சிகரங்களில்… தண்ணீர் துவைக்கும் அருவிகளே…’ 😉
  • ‘லைஃப் ஆஃப் பை’-யில் மீர்கட்டைக் காட்டிய போது, ‘இந்த விலங்கின் பேர் மீர்கட். இதை நான் ஓக்லேண்ட் ஜூ-ல பார்த்திருக்கேன்’ என்று பீத்திக் கொண்டேன். ஆனால் பிரபு அண்ணா ஓக்லேண்ட் விலங்கியல் பூங்காவிற்குக் கூட்டிச் சென்றிருந்த போது, பிரமோத் அண்ணா, முசி மற்றும் நான் இந்த மீர்கட்டைத் தேடி அலைந்த கதை ‘முடியல’.
  • Bay 101 சூதாட்ட விடுதிக்குச் சென்று ‘Poker’ விளையாடியது ஒரு மறக்க முடியாத அனுபவம். இதையே பொழப்பா வெச்சிகிட்டு சுத்தறவங்களப் பாத்தப்ப, ஆச்சர்யமா இருந்துச்சு.
  • புது பைக்ல போன மறக்க முடியாத பயணமான ‘முத்யலமடுவு'(Pearl Valley). அப்படி மறக்க முடியாத அளவுக்கு, ‘அங்க என்ன இருக்குனு’ கேக்குறீங்களா, ‘ஒண்ணுமே இல்லீங்க’ 😦
  • தமிழ்நாட்டு பவர்கட்டால ஒரு நல்ல விஷயம் என்னன்னா, என்னோட புத்தகம் வாசிக்கும் பழக்கம் அதிகமாச்சு. அசோகமித்திரனின் ’18-வது அட்சக்கோடு’ மற்றும் தஸ்தயேவ்ஸ்கியின் ‘வெண்ணிற இரவுகள்’ இந்த வருடம் படித்ததில் பிடித்த நாவல்கள்.
  • கணியம்‘ இதழுக்காக சில கட்டுரைகளை மொழிபெயர்க்கும் போது தான், மொழிபெயர்ப்பு எத்துணை கடினம்(எனக்கு) என்று தெரிந்தது. தெரிஞ்சுக்க வேண்டியது, இன்னும் நிறைய இருக்குன்னு மட்டும் தெளிவாத் தெரியுது.

இன்னும் நிறைய எழுதணும்னு தோணுது; ஆனா எழுத உட்கார்ந்தா, எதுவும் வர மாட்டேங்குது. இப்படியே வெச்சிட்டிருந்தா, போன வருஷம் மாதிரி இந்தப் பதிவு என்னோட Draft-ல மட்டும் தான் இருக்கும். எனவே …

அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s