புத்தகங்கள்

இந்த வருடத்தைய எனது வாசிப்பனுபவத்தைப் பற்றியும், வாசித்தப் புத்தகங்களைப் பற்றியும் குட்டி குட்டிக் குறிப்புகளாக இந்த பதிவிலிடுகிறேன்.

  • வெகுநாட்களாக எனது விருப்பப் பட்டியலில் இருந்த புத்தகங்களை வாசிக்க முடிந்தது. [தண்ணீர், பின்தொடரும் நிழலின் குரல், Metamorphosis, Animal Farm]
  • இரண்டு வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த கிண்டில் தூசு தட்டப்பட்டது.  பயணங்களின் போது பைக்குள் திணித்து வைப்பதற்கு தோதாக இருந்ததும், அமேசானின் இந்திய மொழிகளில் மின்புத்தகங்கள் அறிவிப்பும் கிண்டில் பக்கம் என் கவனத்தைத் திருப்புவதற்கு போதுமானதாக இருந்தன.
  • தொடர் பயணங்களில் புத்தகங்கள் வழித்துணையாக வந்தன. இவ்வருடத்தில் எனது வாசிப்பில் ஏற்பட்டுள்ள ஏற்றத்திற்கு இது ஒரு முக்கிய காரணம்.
  • பின்தொடரும் நிழலின் குரலுக்குப் பின் சென்று கொண்டிருந்த போது, அலுவலகப் பணி நிமித்தமாக அயல்நாடு பயணம் செய்ய நேரிட்டது. சில மாதங்களுக்குப் பின், அதைத் தொடரலாம் என்ற போது மீண்டும் முதலிலிருந்தே வாசிக்க நேரிட்டது. மீள்வாசிப்பில் குரல் முன்பை விடத் தெளிவாகவே கேட்டது. இவ்வருடம் நான் வாசித்ததில் மனதைக் கவர்ந்த புத்தகம்.
  • குட்ரீட்ஸ் புத்தகங்கள் வாசிப்பவர்களுக்கான சமூக வலைத்தளம். இதில் கணக்கு துவங்கி வருடங்களானாலும், பயன்படுத்த ஆரம்பித்தது என்னவோ இவ்வருடம் ஜீன் மாதத்திலிருந்து தான். அதில் 2016 வாசிக்கும் சவாலில் ’10 புத்தங்கள் வாசிக்க வேண்டும்’ என்று நானும் இணைந்தேன். ஒரு வழியாக நேற்று தான் பத்தாவது புத்தகத்தை வாசித்து முடித்து, அந்த சவாலை நிறைவு செய்தேன். மகிழ்ச்சி!
  • வாசித்த புத்தகங்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டை விட அதிகம். வரும் ஆண்டில் இவ்வருடத்தை விட அதிகமாக வாசிக்க வேண்டும் ;-).

screen-shot-2016-12-25-at-7-44-33-am

பின்னூட்டமொன்றை இடுக