
சுஜாதாவின் ‘கடவுள்’, கடவுள் நம்பிக்கை பற்றி அவர் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு பத்திரிக்கைகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. ‘பிரபஞ்சத்தைப் படைத்தது யார்? (யாராவது படைத்திருந்தால் அவரைப் படைத்தது யார்?)’ என்று பலருக்குள்ளும் இருக்கும் கேள்விகளுடன் கட்டுரையைத் தொடங்குகிறார். சரி கேள்விகளுக்கான விடையைச் சொன்னாரா?
- பௌத்தம், சமணம், சீக்கியம், இஸ்லாம், சூஃபிஸம், ஷிந்தோ, தாவிஸம், ஜீடாயிஸம் என்று பல மதக்ருத்துக்களின் சுருக்கம்.
- அன்த்ராபிக் தத்துவம், ஷ்ரோடிங்கரின் பூனைக் கதை, தி மைண்ட் ஆஃப் காட் புத்தகத்திலிருந்து ஆத்திகனுக்கும நாத்திகனுக்கும் நடைபெறும் கற்பனை விவாதம், நிச்சயமில்லாத தத்துவம், Fractals
- நாஸ்ட்ராடமஸ், கனவுகள், உலகில் நிகழ்ந்த எதிர்பாராத சம்பவங்கள், தற்செயல்கள்(Coincidence), முரண்பாடுகள், ‘The Unicorn in the Garden‘ என்கிற கதை, பூர்வ ஜென்ம ஞாபகம், மனிதவடிவ விருப்பம்
- ஓம் விதி, ‘க்வார்க்’ எனும் உட்துகள், சினேகித எண்கள், ஜாகராண்டா மரங்க்ள், புறநானூறு, ஸ்பினோஸா, ‘விஸ்லரின் தாய்‘ சித்திரம்
- ஐன்ஸ்டீனின் ‘ரிலேட்டிவிட்டி’ சித்தாந்தம், க்வாண்டம் தியரி, எதிர்மறைகள்
இப்படி பல சமாச்சாரங்களை தெரிஞ்சு வெச்சிருந்த மனிதர், நமக்கும் சொல்கிறார். ஆனால் கடைசி வரைக்கும் மேலே சொன்ன கேள்விகளுக்கு விடையே சொல்லவில்லை
சரி கடவுள் நம்பிக்கை அவருக்கு இருக்கா?
அறிவியலின் பதில் – ‘இருக்கலாம்’. ஆன்மீகத்தின் பதில் ‘இருக்கிறார்’. என் பதில் ‘it depends’
புத்தகத்தில் பல இடங்களில் நம்மாழ்வார் பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று:-
ஆணல்லன் பெண் அல்லன்; அல்லா(து) அலியுமல்லன்
காணலும் ஆகான். உளன் அல்லன்; இல்லையல்லன்
பேணுங்கால் பேணும் உருவும் ஆகும். அல்லனுமாம்.
கோணை பெரிதுடைத்து எம்பெம்மானைக் கூறுதலே!
சுஜாதாவின் ‘கடவுள்’ – இருக்காரு… ஆனா இல்ல… (படிக்கலாம்)